காதல்: ஒரு முழுமையான வழிகாட்டி – பரிணாமம், மனஇயல், வெற்றி-தோல்வி எப்படி?

காதல்: ஒரு முழுமையான வழிகாட்டி – பரிணாமம், மனஇயல், வெற்றி-தோல்வி எப்படி?

  • காதல் என்பது புரிந்துகொள்ள வேண்டிய ஒரு கருத்து அல்ல; உணர வேண்டிய ஒரு காற்று. திடீரென உன் இதயத்தைத் தொடும் ஒரு வெப்பம், மௌனத்தில் கேட்கும் ஒரு இசை, நீ சிரிப்பதற்கு முன்னால் உன் உள்ளத்தில் ஏற்படும் ஒரு பருவமாற்றம். காதல் என்பது ஒரு கடவுள், காதல் இல்லை என்றால் உலகமே இல்லை,
  • இப்படியெல்லாம் காதலை மிகைப்படுத்தி வாயிலேயே வடை சுட நிறைய கவிஞர்கள் உண்டு ஆனால் நான் அதை பண்ண மாட்டேன். உண்மை என்னவென்றால் காதல் இயற்கையின் மிக அற்புதமான மாயை! அது மனித மூளையில் நடக்கும் ஒரு குறிப்பிட்ட வேதியியல் வினை அல்ல, மாறாக, அது ஒரு வகையான “ஆக்கபூர்வமான பைத்தியக்காரத்தனம்” (Constructive Madness). இந்தப் பைத்தியக்காரத்தனம் தான் நம்மை வாழ வைக்கிறது, நமக்கு பிற்காலத்தில் வலுவைத் தருகிறது.
  • முதல் பார்வையில் ஏற்படும் காதல், அதிசயமான ஒரு மூளைக் குழப்பமாகும். “டோபமைன்” என்ற வேதிப்பொருள் நம் மனதைக் கவரும், ஒரு இனிமையான போதைப் பொருளாகும். பிறகு வருவது “ஆக்ஸிடாசின்” – அன்பின் வேதிப்பொருள், அது நமக்கு ஆழ்ந்த பிணைப்பையும் நம்பிக்கையையும் தரும். இந்த இரண்டும் சேர்ந்து, மனித இனத்தின் தொடர்ச்சியை உறுதி செய்கின்றன.
  • காதல் தான் நமது முன்னோர்களை இரட்டைக் கூட்டங்களாக இணைத்தது. அது தான் நமது வலுவில்லாத குழந்தைகளைப் காப்பாற்றுவதற்கான அடிப்படை. ஆனால் காதலுக்கு ஒரு இருண்ட பக்கமும் உண்டு; அது சில சமயங்களில் ஒரு போதைப் பொருளைப் போல நம்மை அழிக்கும்.

காதலின் அறிவியல் பின்னணி என்ன? அதன் பரிணாம முக்கியத்துவம் என்ன? அதன் உளவியல் இரகசியங்கள் என்ன? இந்தக் கட்டுரை காதலின் முழு வரைபடத்தையும் உங்களுக்கு முன் வைக்கும்.

 

காதலின் முக்கியத்துவம் 

  • சில திரைப்படங்கள காதலிக்காதவங்க எல்லாம் மனுசனே கிடையாது அப்படின்னு சொல்றது கேட்டு இருப்பீங்க ஆனா இந்த உலகத்துல மனுஷன் மட்டும் தான் காதலிக்கிறானா என்ன? நிச்சயமாக இல்லை
  • பறவைகள் இனத்தில் 90% ஒருவனுக்கு ஒருத்தின்னு வாழ்கின்றன ஆனால் பாலூட்டி இனங்களில் மூன்றிலிருந்து ஐந்து சதவீதம் மட்டுமே ஒருவனுக்கு ஒருத்தி என்ற விதியை பின்பற்றுகின்றன. ஏன் இத்தகைய உயிரினங்கள் எல்லாம் காதல் செய்கின்றன?
  • இந்த‌ கேள்விக்கு பதில் காதல் செய்யும் மற்றும் காதல் செய்யாத உயிரினங்களில் உள்ள பொதுவான வேறுபாடுகளை ஆராய்வதன் மூலம் கிடைக்கும்.
  • ஒரு ஆட்டுக்குட்டி பிறந்த சில மணி நேரங்களில் தன் தாயின் வேகத்தில் 60 லிருந்து 70% வேகத்திற்கு ஓடும். ஆனால் காதலிக்கும் அனைத்து உயிரினங்களுக்கும் இருக்கும் பொதுவான ஒற்றுமை அவைகளின் குழந்தைகள் பிறந்தவுடன் தனித்து உயிர் பிழைக்க வலிமையற்றவைகளாக உள்ளன.
  • எனவே இந்த உயிரினங்கள் தனது அடுத்த தலைமுறை உருவாக்க வேண்டும் என்றால் அதன் குழந்தைகளுக்கு நீண்டகால அரவணைப்பு மற்றும் அக்கறை தேவைப்படுகிறது. அதனால் தான் இந்த உயிரினங்கள் காதலிக்கின்றன. ஆனால் மனித குழந்தைகள் ஏன் வலிமையற்றவைகளாக உள்ளன?

 

பரிணாம சங்கிலி விளைவு: நிமிர்ந்து நடப்பதில் இருந்து காதலிக்கும் வரை

முதல் டோமினோ: நிமிர்ந்து நடத்தல்

  • மூன்று புள்ளி மூன்று மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்காவில் சவானா சமவெளி விரிவடைய தொடங்கியது நமது முன்னோர்கள் காடுகளிலிருந்து புல்வெளிப் பகுதிகளுக்கு குடிபெயர்ந்தனர். இரண்டு கால்களில் நடப்பது, இந்த திறந்த பிரதேசங்களில் சுற்றித் திரிவதற்கு குறைந்த ஆற்றலையே விரயமாக்கியது. மேலும், உயரமான புல்லுக்கு அப்பால் இருந்து இரைபிராணிகளைக் காணவும் இது உதவியது.
  • முக்கியமான விளைவு: இரு கால்களிலும் சரியாக உடல் எடை தாங்குவதற்கு, இடுப்பெலும்பு (Pelvis) குறுகலாக மாறியது.

இரண்டாவது டோமினோ: பாதுகாப்பற்ற மனித குழந்தை

  • இந்த குறுகிய இடுப்பெலும்பு, மற்றொரு பரிணாம போக்கான “பெரிய மூளை” வளர்ச்சியுடன் மோதியது.
  • இதன் விளைவாக “பிரசவ இடர்பாடு” (Obstetric Dilemma) உருவானது: குழந்தையின் தலை, பிரசவ வழியை (Birth Canal) கடந்து வெளியே  வருவதில் மிகப்பெரிய இடர்பாடுகள் ஏற்பட்டன. தீர்வு? குழந்தைகள் முழுமையாக வளர்வதற்கு முன்பே, பிறக்கத் தொடங்கின. இந்த காரணத்தினால் தான் இன்றும் குழந்தைகள் பிறப்பதில் மிகப்பெரிய சிக்கல்கள் உருவாகின்றன.
  • விளைவு: மனித குழந்தைகள் மிகவும் பாதுகாப்பற்ற நிலையில் பிறக்கின்றன. அவற்றின் மூளை வளர்ச்சி 25% மட்டுமே நிறைவடைந்திருக்கும். எனவே, நீண்ட காலம் வெளியிலிருந்து கவனிப்பும், மிகுந்த சக்தி முதலீடும் தேவைப்படுகிறது.

மூன்றாவது டோமினோ: “இணை பிணைப்பு” (Pair-Bond) தேவை

  • தாய் தனியாக, தன்னோடு ஒட்டிக்கொள்ள முடியாத ஒரு பாதுகாப்பற்ற குழந்தையின் சுமையோடு, போதுமான உணவு சேகரிக்கவோ தற்காத்துக் கொள்ளவோ முடியாது. அதனால், அவளுக்கு ஒரு துணை தேவை.
  • தீர்வு: ஒத்துழைப்பான இணைகளை (ஆணும் பெண்ணும்) உருவாக்கியவர்களே பரிணாமத்தில் வெற்றி பெற்றனர். மற்ற அனைவரும் அவர்களது அடுத்த தலைமுறை உருவாக்க முடியவில்லை. “இணை பிணைப்பு” என்ற கருத்து உருவானது. இது இனப்பெருக்கம் மட்டுமல்ல, குழந்தைகளின் வாழ்வாதார உத்தியாக இருந்தது.
  • தந்தையின் பங்கு முக்கியமானது: உணவு வழங்குதல் (கைகள் கட்டப்படாததால் வளங்களை எடுத்து வர முடிந்தது), பாதுகாப்பு, மற்றும் குழந்தை பராமரிப்பில் உதவுதல்.

இறுதி டோமினோ: காதலின் நரம்பியல் வேதியல்

  • இந்த முக்கியமான இணை பிணைப்புகளை உறுதிப்படுத்த, பரிணாமம் நம் மூளையை (Attachment)க்காக வடிவமைத்தது.
  • ஆக்ஸிடாஸின் மற்றும் வேசோபிரெசின் (பாதுகாப்பு மற்றும் உறுதிப்பாடு) போன்ற வேதிப்பொருட்கள் மனித இனப்பெருக்க உத்தியின் மையமாக மாறின. இவற்றைப் பற்றி பின்னர் பார்ப்போம்.
  • “காதலில் விழுதல்” என்பது, பெற்றோர்கள் ஒரு குழந்தையை வளர்க்கும் வரை ஒன்றாக இருக்க உறுதி செய்யும் ஒரு சக்திவாய்ந்த உயிரியல் பொறிமுறையாக உருவானது.

 

காதலின் 3 நிலைகள்: இரசாயனங்களின் ஆழமான தாக்கம் மற்றும் பக்க விளைவுகள்

காதலின் ஒவ்வொரு நிலையும் நமது மூளையில் குறிப்பிட்ட ஹார்மோன்களை வெளியிடுகிறது. இந்த ஹார்மோன்கள்தான் நமது நடத்தை, எண்ணங்கள் மற்றும் உணர்ச்சிகளை முழுவதுமாக மாற்றி விடுகின்றன.

காமம் (Lust) – அடிப்படை உந்துதல்

முக்கிய ஹார்மோன்கள்: டெஸ்டோஸ்டிரோன் (ஆண் ஹார்மோன்) மற்றும் ஈஸ்ட்ரோஜன் (பெண் ஹார்மோன்).

இவை எப்படி வேலை செய்கிறது:

இந்த ஹார்மோன்கள் நமது உடலின் அடிப்படை இயக்கங்களை கட்டுப்படுத்துபவை. இனப்பெருக்கத்திற்கான வலுவான உந்துதலையும், உடலுறவு தேவையையும் இவை தூண்டுகின்றன. இந்த நிலை ஒரு குறிப்பிட்ட நபரை நோக்கி இல்லாமல், ஒரு பொதுவான உடலியல் தூண்டுதலாக இருக்கும்.

விரிவான பக்க விளைவுகள் (Detailed Side Effects):
  • உடல் தோற்றத்தில் அதீத கவனம்: இந்த நிலையில் உள்ளவர்கள் ஆண்கள்/பெண்களின் உடல் அழகு, உடற்தகுதி, வாசனை மீது அதிக ஈர்ப்பு கொள்கிறார்கள். விளம்பரங்கள், திரைப்படங்களில் வரும் கவர்ச்சி காட்சிகள் இவர்களை எளிதாக கவரும்.
  • உடனடி திருப்தி தேடுதல்: இந்த தேவை நிறைவேறாவிட்டால் எரிச்சல், அமைதியின்மை போன்ற உணர்வுகள் ஏற்படும்.
  • மன அழுத்தம் மற்றும் போட்டி உணர்வு: ஒருவரை “கவர” வேண்டும் என்ற போட்டி மனோபாவம் ஏற்பட்டு, மன அழுத்தத்தை உருவாக்கும்.

ஈர்ப்பு (Attraction) – அதீத உணர்ச்சிகளின் கட்டம்

முக்கிய ரசாயனங்கள்: டோபமைன், நோரெபினெப்ரின், செரோடோனின்.

இவை எப்படி வேலை செய்கிறது:

  • டோபமைன்: மூளையின் “இன்ப மையத்தை” (Pleasure Center) தூண்டுகிறது. ஒரு போதைப் பொருளைப் பயன்படுத்துவது போன்ற தீவிர மகிழ்ச்சி மற்றும் உற்சாகத்தைத் தருகிறது.
  • நோரெபினெப்ரின்: உடலை “போர் அல்லது பறத்தல்” (Fight or Flight) முறைக்குத் தயார்படுத்துகிறது. இதயத் துடிப்பு, இரத்த அழுத்தம், சக்தி – அனைத்தையும் அதிகரிக்கிறது.
  • செரோடோனின்: மனநிலையை சமநிலையில் வைக்கும் முக்கிய ரசாயனம். காதலின் போது இதன் அளவு குறைவதால், ஒரே மனிதர் மீது ஒரு போதையான எண்ணம் (Obsession) ஏற்படுகிறது.
விரிவான பக்க விளைவுகள் (Detailed Side Effects):
  • தீவிரமான மனோபாவ மாற்றங்கள்:
  • உணவு, தூக்கம் மறத்தல்: மூளையின் முழுக் கவனமும் காதலன்/காதலியின் மீதே இருப்பதால், உடலின் அடிப்படைத் தேவைகள் புறக்கணிக்கப்படுகின்றன.
  • மனதில் தொடர்ச்சியான எண்ணங்கள்: செரோடோனின் குறைவு, காதலனை/காதலியைப் பற்றியே தொடர்ச்சியான எண்ணங்களை உருவாக்குகிறது. இது மகிழ்ச்சியாகவும் இருக்கலாம் அல்லது வேதனையாகவும் இருக்கலாம்.
  • முடிவெடுக்கும் திறன் குறைதல்: மூளையின் பகுத்தாயும் பகுதி (Prefrontal Cortex) சரியாக வேலை செய்யாது. இதனால், ஆபத்தான முடிவுகள் எடுக்கும் தன்மை அதிகரிக்கும் (எ.கா., திடீர் திருமணம், வேலையை விட்டு விடுதல்).
  • குறைகளை முழுவதுமாக புறக்கணித்தல்: டோபமைனின் உற்சாகத்தில்,காதலன்/காதலியின் குறைகள், எதுவும் தெரியாது. இது மனிதனை “தெய்வம்” ஆக காணும் நிலை.

பிணைப்பு (Attachment) – நிலையான அமைதியின் கட்டம்

முக்கிய ஹார்மோன்கள்: ஆக்ஸிடோசின் (“கட்டிப்போடும் ஹார்மோன்”), வேசோபிரெசின்.

இவை எப்படி வேலை செய்கிறது:

  • ஆக்ஸிடோசின்: நெருக்கமான தொடர்பு (கட்டிப்பிடித்தல், கைகள் கலத்தல், உடலுறவு, நீண்ட உரையாடல்), நம்பிக்கை மற்றும் பரஸ்பர உதவி போன்ற செயல்களின் மூலம் இவை பெரிய அளவில் வெளியாகின்றன. இது ஒருவருக்கொருவர் ஆழமான நம்பிக்கை மற்றும் பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்துகிறது.
  • வேசோபிரெசின்: இந்த ஹார்மோன் நீண்டகால பிணைப்பு மற்றும் ஒருவரைப் “பொறுப்பாக” பார்க்கும் உணர்வை (Possessiveness) வலுப்படுத்துகிறது.
விரிவான பக்க விளைவுகள் (Detailed Side Effects):
  • ஆழ்ந்த மன அமைதி மற்றும் பாதுகாப்பு: இணையுடன் இருந்தால், உலகத்தின் எந்த பிரச்சனையும் தாங்க முடியும் என்ற உணர்வு.
  • சமூக பிணைப்புகள் வலுப்படுதல்: ஆக்ஸிடோசின் நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள் மீதான அக்கறையையும் வளர்க்கிறது.
  • பெற்றோர்-குழந்தை பிணைப்பு: குழந்தை பிறந்த பிறகு, ஆக்ஸிடோசின் தாய்/தந்தைக்கும் குழந்தைக்கும் இடையே அளவிட முடியாத பாசத்தை உருவாக்க உதவுகிறது.
  • பிரிவினால் ஏற்படும் வலி: நீண்டகால உறவுகள் முறிந்தால், இந்த பிணைப்பு ஹார்மோன்களின் அளவு குறைவதால், உடல் நோவு (Body Ache), கடும் மனச்சோர்வு (Depression), வாழ்க்கையில் அர்த்தமின்மை போன்ற கடினமான அனுபவங்கள் ஏற்படுகின்றன. இது ஒரு போதைப் பொருளை நிறுத்துவது போன்ற உணர்வை ஏற்படுத்தும்.

முக்கிய புள்ளி: இந்த மூன்று நிலைகளும் இயற்கையானவை. இவற்றின் விளைவுகளைப் புரிந்துகொள்வது, காதல் மற்றும் உறவுகளில் நமக்கு ஏற்படும் மாற்றங்களை நன்றாக கையாள உதவும்.

 

காதல் தோல்வியை சமாளிப்பது எப்படி? மூளையும் உணர்வுகளும் சம்மதிக்கும் சிறந்த வழிகள்

காதல் தோல்வி என்பது ஒரு வலுவான உடலியல் மற்றும் மனோதத்துவ அதிர்ச்சி தான். இதை “விளையாட்டா நினைத்துவிட” முடியாது. உங்கள் மூளை மற்றும் உடல் ஒரு போதைப் பொருளை (அந்த நபர்) இழப்பதற்கு ஏற்ப வலி கொடுக்கிறது. இந்த கட்டத்தை சரியாக நிர்வகிப்பதே விரைவாக மீண்டெழுவதற்கான திறவுகோல்.

முதலில், உங்கள் மூளையில் என்ன நடக்கிறது?

நீங்கள் ஒருவரை நேசிக்கும் போது, உங்கள் மூளை டோபமைன் (இன்பம்) மற்றும் ஆக்ஸிடோசின் (பாதுகாப்பு) போன்ற ரசாயனங்களை வெளியிடுகிறது. உறவு முறிந்தவுடன், இந்த “இன்ப ரசாயனங்கள்” திடீரென நின்றுவிடுகின்றன.

  • இதன் விளைவு: உங்கள் மூளை ஒரு கடுமையான Withdrawal அனுபவிக்கிறது, ஒரு போதையாளி மருந்து இல்லாமல் இருப்பது போல.
  • முக்கிய ஹார்மோன் மாற்றம்: கார்டிசோல் (மன அழுத்த ஹார்மோன்) அளவு அதிகரிக்கிறது. இதனால் தூக்கம் வராமல், உணவு சுவைக்காமல், தொடர்ந்து கவலையுடன் இருக்கிறீர்கள்.

இந்த விளைவுகளைப் புரிந்துகொண்டு, கீழ்கண்ட படிகளைப் பின்பற்றினால், நிச்சயமாக இந்த வலியிலிருந்து வெளியே வர முடியும்.

காதல் தோல்வியை சமாளிக்க பயனுள்ள செயல்முறைகள்:

வலியை ஒப்புக்கொள்ளவும் மற்றும் கதைக்கவும் (Acknowledge & Vent)
  • எதை செய்ய வேண்டும்: உங்கள் வலியை மறைக்காதீர்கள். அழுதால் தான் வலி குறையும். ஒரு நம்பகமான நண்பர் அல்லது குடும்ப உறுப்பினரிடம் உங்கள் feelingsளை பகிர்ந்து கொள்ளுங்கள்.
  • ஏன் செய்ய வேண்டும்: உணர்ச்சிகளை அடக்கி வைத்தால், அது உடல்நலப் பிரச்சனைகளாக (தலைவலி, சோர்வு) வெளிவரும். பேசியவுடன் மன அழுத்தம் குறையும்.
தூரத்தை உருவாக்கவும் (Create Distance)
  • எதை செய்ய வேண்டும்: அவர்/அவளுடைய எல்லா தொடர்புகளையும் துண்டித்து விடுங்கள்.
  • ஃபோன் நம்பர்களை டெலிட் செய்யவும்.
  • சோஷியல் மீடியா ப்ரொஃபைல்களை பிளாக்/அன்ஃபாலோ செய்யவும்.
  • பழைய படங்கள், மடல்களை இப்போது பார்க்காதீர்கள்.
  • ஏன் செய்ய வேண்டும்: அவர்களைப் பார்க்கும் ஒவ்வொரு முறையும், உங்கள் மூளையில் டோபமைன் சிறிது வெளியாகி, “போதை” ஏக்கம் தான் வலுபெறும். இந்த சுழற்சியை உடைக்க தூரம் மட்டுமே முக்கியம்.
உங்கள் உடலை கவனித்துக் கொள்ளுங்கள் (Take Care of Your Body)

மனக்கவலை உடலில் தாக்கம் ஏற்படுத்தும். எனவே, உடலை வலுவாக வைத்தால் மனமும் வலுவடையும்.

  • உடற்பயிற்சி (Exercise): ஜிம் செல்லுங்கள், ஓடுங்கள், நடக்கவும். உடற்பயிற்சி இயற்கையான எண்டோர்பின்களை (Endorphins) வெளியிடும். இது இயற்கையான “மகிழ்ச்சி மருந்து” போன்றது.
  • சத்தான உணவு (Healthy Food): ஜங்க் ஃபுட் தவிர்து, பழங்கள், காய்கறிகள் உள்ளிட்ட சத்தான உணவை சாப்பிடுங்கள்.
  • போதுமான தூக்கம் (Proper Sleep): ஒரு நிலையான sleep ஷெடியூலை பின்பற்ற முயற்சி செய்யுங்கள்.
உங்கள் மனதை பிஸியாக வைத்திருங்கள் (Keep Your Mind Busy)
  • புதிய திறமைகளை கற்றுக்கொள்ளுங்கள் (Learn New Skills): இசை, நடனம், ஒவியம், cooking, புதிய மொழி – ஏதேனும் ஒன்றை தொடங்குங்கள். இது உங்கள் மூளைக்கு ஒரு புதிய கவனத்தைத் தரும்.
  • படிக்கவும் (Read): ஊக்கமளிக்கும் புத்தகங்கள், கதைகள் வாசிக்கவும்.
  • இலக்கு வைத்துக்கொள்ளுங்கள் (Set Goals): வேலை, படிப்பு, அல்லது தனிப்பட்ட வளர்ச்சி related லக்குகளை வைத்து, அதற்காக வேலை செய்யுங்கள்.
சமூகத்துடன் இணைந்திருங்கள் (Reconnect Socially)
  • பழைய நண்பர்களை சந்திக்கவும்.
  • குடும்பத்தினருடன் அதிக நேரம் செலவிடுங்கள்.
  • புதிய people ஐ சந்திக்க social events or clubs ஐ join ஆகவும்.
உங்களை மன்னிக்கவும் (Forgive Yourself)
  • “நான் தான் குற்றவாளி”, “என் தவறுதான்” என்று உங்களைத்தானே குறை சொல்லிக் கொண்டிருப்பது நல்லதல்ல.
  • இது வாழ்க்கையின் ஒரு பாடம் என்று நினைக்கவும். இந்த அனுபவம் உங்களை மிகவும் பலமான மற்றும் புத்திசாலியான நபராக்கும்.
தவிர்க்க வேண்டிய விஷயங்கள் (What to Avoid):
  • அவர/அவள் வீட்டிற்கு அருகே போகாதீர்கள்.
  • அவர்களைப் பற்றி friendsடன் பேசி, information சேகரிக்க முயற்சிக்காதீர்கள்.
  • உடனடியாக புதிய உறவு தொடங்க முயற்சிக்காதீர்கள். முதலில் நீங்கள் குணமாக வேண்டும்.
  • மது அல்லது போதை பொருட்களை துணைக்கு அழைக்காதீர்கள். இது பிரச்சனையை மேலும் மோசமாக்கும்.

காதல் தோல்வியின் வலி நிரந்தரமானது அல்ல. உங்கள் மூளையை புரிந்து கொண்டு, மேலே உள்ள படிகளை சிறிது சிறிதாக பின்பற்றினால், நீங்கள் இந்த கட்டத்தை கடந்து, முன்பை விட வலிமையாக வெளிவருவீர்கள். இரவின் இருட்டு அடர்த்தியானதாக இருக்கலாம் ஆனால் அதனால் ஒருபோதும் சூரிய உதயத்தை தடுக்க முடியாது.

காதலிக்க நமது உடலில் இவ்வளவு மாற்றங்கள் பரிணாம வளர்ச்சியில் உருவாகியுள்ளன இதனை ஹேக் செய்ய முடியுமா? முடியும்.

 

காதலும் போதை பொருட்களும்: அதிர்ச்சி தரும் உண்மை!

காதல் மற்றும் போதை பொருட்கள் (மது, மருந்துகள்) இரண்டும் நமது மூளையின் அதே “இன்ப மையத்தை” (Brain’s Reward Center) தாக்குகின்றன. இதன் விளைவாக, காதலில் வீழ்வதும், ஒரு போதைப் பொருளை பயன்படுத்துவதும் மூளையில் ஏற்படும் விளைவுகள் மிகவும் ஒரே மாதிரியாக இருக்கும்.

மூளையில் என்ன நடக்கிறது? ஒப்பீடு
  1. மூளையில் தாக்கம்:
  • காதல்: மூளையின் “இன்ப மையத்தில்” டோபமைன் என்ற ரசாயனம் அதிக அளவில் வெளியாகிறது.
  • போதைப் பொருட்கள்: போதைப் பொருட்களும் அதே இன்ப மையத்தை தூண்டி, டோபமைனை கடுமையாக வெளியிடச் செய்கின்றன.
  1. உணரும் உணர்வு:
  • காதல்: தீவிர மகிழ்ச்சி, உற்சாகம், ஆற்றல், கவனம் மற்றும் நினைவுகளில் ஒரே நபர் மீது மட்டும் ஈடுபாடு.
  • போதைப் பொருட்கள்: தீவிர மகிழ்ச்சி, உற்சாகம், பிரச்சனைகளில் இருந்து தற்காலிக தப்பிப்பு.
  1. தொடர்பு ஏற்படும் போது:
  • காதல்: காதலன்/காதலியை பார்க்கும் போது, அவருடன் பேசும் போது டோபமைன் வெளியாகி இன்பம் தரும்.
  • போதைப் பொருட்கள்: மது/மருந்து உடலில் செல்லும் போது டோபமைன் வெளியாகி இன்பம் தரும்.
  1. தொடர்பு இல்லாத போது:
  • காதல்: காதலன்/காதளியிடமிருந்து பிரிந்தால், டோபமைன் அளவு குறைகிறது. இதனால் வலி, கவலை, மன அழுத்தம் ஏற்படுகிறது.
  • போதைப் பொருட்கள்: போதைப் பொருள் கிடைக்காத போது, டோபமைன் அளவு குறைகிறது. இதனால் தட்டுதல் அறிகுறிகள் (Withdrawal Symptoms) like வலி, கவலை, மன அழுத்தம் ஏற்படுகிறது.
  1. நடத்தை மாற்றம்:
  • காதல்: காதலன்/காதலியை மீண்டும் பார்க்க ஒரு வலுவான தாகம் (Craving) ஏற்படுகிறது.
  • போதைப் பொருட்கள்: போதைப் பொருளை மீண்டும் பயன்படுத்த ஒரு வலுவான தாகம் (Craving) ஏற்படுகிறது.
  1. சுழற்சி:
  • காதல்: ஒரே நபரை சுற்றி மனது சுழலும். (ஆக்கிரமிப்பு எண்ணங்கள் – Obsession)
  • போதைப் பொருட்கள்: ஒரே போதைப் பொருளை சுற்றி மனது சுழலும். (போதை – Addiction)

ஏன் காதல் தோல்வி இவ்வளவு வலி தருகிறது?

  • நீங்கள் ஒரு நபரை “வெகு காலம்” நேசிக்கும் போது, உங்கள் மூளை அந்த நபரை ஒரு “இன்ப மூலமாக” (Source of Pleasure) அடையாளம் கண்டுகொள்கிறது.
  • உறவு முறிந்தவுடன், அந்த “இன்ப மூலம்” திடீரென கிடைக்காமல் போகிறது.
  • இது, ஒரு போதையாளியிடமிருந்து அவரின் போதைப் பொருளை திடீரென பறித்து விடுவது போலாகும்.
  • இதனால், கடுமையான தட்டுதல் (Withdrawal) ஏற்படுகிறது. இதன் அறிகுறிகள்:
  • உடல் வலி (Body Ache)
  • கடும் சோகம் மற்றும் கவலை (Depression & Anxiety)
  • தூக்கம் இல்லாமை
  • ஆக்கிரமிப்பு எண்ணங்கள் (Obsessive Thoughts)
  • ஒரு சூழ்நிலையை கையாளும் திறன் குறைதல்

அபாயகரமான தொடர்பு: தவறான சமாளிப்பு முறை

காதல் தோல்வியின் வலியை தாங்க முடியாமல், சிலர் மது மற்றும் போதைப் பொருட்களுக்கு தப்புகிறார்கள்.

  • எப்படி: மது/மருந்துகள், டோபமைனை தற்காலிகமாக வெளியிட்டு, வலியை மறக்க செய்கின்றன.
  • விளைவு: ஆனால், இந்த “தீர்வு” ஒரு அபாயகரமான சுழற்சியை உருவாக்குகிறது.
  1. காதல் வலி → மது/மருந்து → தற்காலிக திருப்தி → வலி திரும்ப வருதல் → அதிக அளவு மது/மருந்து தேவை.
  2. இறுதியில், ஒருவர் இரட்டை போதையில் (Double Addiction) சிக்கிக் கொள்கிறார்:
  • மனிதருக்கான போதை (Psychological)
  • பொருளுக்கான போதை (Physical)

காதல் தோல்வியின் வலி இயற்கையானது. ஆனால், அதை சமாளிக்க மது மற்றும் போதைப் பொருட்கள் சரியான வழி அல்ல. காதல் ஹார்மோன்கள் நீங்கள் நேசிப்பவரை பாதுகாக்கவும் உங்கள் ரத்த வரிசையை விரிவுபடுத்தவும் இயற்கையில் பரிணாம வளர்ச்சியில் கிடைத்தது. இதை அதற்காக மட்டும் பயன்படுத்துங்கள். இல்லை என்றால் நீங்கள் நேசிக்கும் மதுவை தவிர உங்களுக்கு சொந்தமாக வேறு எதுவும் இருக்காது.

நினைவில் கொள்ளுங்கள்: காதல் தோல்வி உங்களை அழிக்கும் விஷமல்ல; மாறாக, உங்களை வலுப்படுத்தும் ஒரு அனுபவமாக மாற்றிக் கொள்ளலாம்.

முடிவுரை

  • இந்த ஆய்வுப் பயணம் நமக்கு ஒரு தெளிவான முடிவைத் தருகிறது: காதல் என்பது வெறும் உணர்ச்சி அல்ல; அது மனித இனத்தின் பரிணாம வெற்றியின் அடித்தளமாகும்.
  • மிருகங்களின் உலகில் அரிதாகக் காணப்படும் இந்த இரட்டைப் பிணைப்பு, நம் இரு கால்களில் நடக்கும் வாழ்க்கைக்கும், நம் குழந்தைகளின் மிகுந்த பலவீனமான நிலைக்கும் ஒரு பரிணாம தீர்வாக உருவானது.
  • குழந்தைப் பருவத்தின் பலவீனமே, பெற்றோரின் காதல் மற்றும் அக்கறையை ஒரு இன்றியமையாத உயிர்வாழ் திறனாக மாற்றியது. இதுவே குடும்பம், கலாச்சாரம் மற்றும் நாகரிகம் எனும் மாபெரும் கட்டமைப்புக்கு அடிக்கல்லாக அமைந்தது.
  • காதலின் உளவியல், அதன் படிமுறைகள், மற்றும் மருந்து போன்ற பக்க விளைவுகள் அனைத்தும், அதன் சக்தி வாய்ந்த நரம்பியல் அடித்தளத்திலிருந்தே உருவாகின்றன. இந்த அதீத சக்தியால் ஏற்படும் வெற்றியும், வேதனையும், மனஉளைச்சல் எல்லாமே நம்மை ‘மனிதர்’ ஆக்கும் அதே பரிணாமக் கதையின் பகுதிகள்தான்.
  • ஆக, காதல் என்பது நமது மூளைக்குள் ஏற்படும் ஒரு வேதியல் வினை மட்டுமில்லை; அது வரலாற்றையே உருவாக்கிய ஒரு சமூகப் புரட்சி.
  • நமது முதல் மிதவையிலிருந்து நவீன உலகின் சிக்கலான உறவுகள் வரை, காதல்தான் நம்மை ஒன்றாக இணைத்து, பரிமாணங்களைக் கற்றுத் தந்து, மனிதப் பண்பின் மிகுந்த பலவீனமான மற்றும் வலிமை வாய்ந்த தருணங்களுக்கு ஆளாக்குகிறது. இதுவே, வேதனையின் முடிவும், புதிய துவக்கமும் ஆகும்.
  • காதல், நம் பரிணாம வாழ்க்கையின் இதயத் துடிப்பு; நம்மைப் பிணைக்கும் அந்தப் பிரம்மாண்டமான, அற்புதமான, மனித இயல்பின் சாராம்சமாகும்.

Leave a Comment