What is a cutting tool?
ஒரு பொருளின் சரியான shape கொண்டு வருவதற்கு அதில் தேவையில்லாத Material களை எடுத்துவிட வேண்டும்.
தேவை இல்லாத Material -களை எடுப்பதற்கு உதவும் கருவி தான் Cutting Tool. Machine ஐ யும், Cutting tool-லும் ஒன்றோடு ஒன்று இணைந்து Drawing – ல் உள்ளபடி Job -களை தயார் செய்கின்றன.
What are the materials used to made cutting tools?
டூல்களில் பலவிதமான டூல்கள் உள்ளன. Operation – க்கு தகுந்தாற் போல் டூல்கள் உள்ளன. அதேபோல் Toolகளும் பல மெட்டீரியல்கள் செய்யப்படுகின்றன
HIGH CARBON STEEL
பழைய காலங்களில் Tool கள் High carbon steel ல் செய்வார்கள். இவற்றில் Carbon அளவு 1.5% இருக்கும் High carbon steel – ஐ தேவைக்கு தகுந்தாற்போல் வடிவமைத்து Heat treat செய்து உபயோகப்படுத்துவார்கள். இந்த டூலகள் சீக்கிரத்தில் மழுங்கிவிடும்.
HIGH SPEED STEEL
மேற்கண்ட High carbon steel டூல்களை விட அதிக life கொடுக்கும் cutting speed அதிகமாக உபயோகப்படுத்தலாம். இந்த வகை steel 5 4% Chronium, 6% Tunsten, 10%Molybdenum, 2% Vanadium, 9% Cobalt 1% carbon இருக்கும். மீதம் Iron இவைகளுக்கு alloying Element என்று பெயர். நமது தேவைக்கு தகுந்தவாறு 5 Alloying element சேர்த்து கொள்வார்கள். இந்த alloying element எல்லாம் டூல்களுக்கு Strength – ஐயும், அதிக Temperature உடன் sharpness – னையும் maintain செய்யும்.
CARBIDE TOOLS
Cemented Carbide என்பது Hard material. Tool கள் செய்வதற்கு பயன்படுகிறது இவைகள் High Speed Tool – களைவிட அதிக hardness உடையவை. HSS tool – களைவிட அதிக Life கொடுக்கும்.இந்த மெடீரியலில் செய்த டூல்கள் மிக அதிக Temperature களில் நன்றாக வேலை செய்யும். இவற்றை Goating செய்தால் அதன் Life அதிகரிக்கும். Coating – ல் பல விதமான coating உள்ளன.
CEMENTED TUNGSTEN CARBIDE
என்பது அரிசி போல் இருக்கும். இதற்கு Tungsten Carbide என்று பெயர். இது நிலத்தில் இருந்து எடுக்கப்படும் மெட்டீரியலாகும். இத்துடன் சில மெடீரியல் தூள்களை சேர்த்து ஒன்றாக அரைத்து Powder போல் செய்து ஒரு Die யில் நிரப்பி மிக அதிக force கொண்டு Press செய்வார்கள். நமக்கு வேண்டியவாறு Die செய்து கொள்ளலாம்.
நாம் உபயோகிக்கும் டூல்கள் எல்லாம் அநேகமாக Carbide Tool கள்தான். இதிலேயே இன்னொரு Variety உள்ளது. அதன் பெயர் Titanium Carbide ஆனால் அவைகள் Garbide போல் அவ்வளவு உறுதியானது அல்ல.
DIAMOND TOOLS :-
Diamond is hardest material. இது மலைப்பாறை போன்றது. இதை நிலத்தில் இருந்து வெட்டி எடுக்கிறார்கள். இவைகள் Grinding Wheel abrasive போன்றவை. இவற்றை Synthetic முறையில் பலவிதமான shape ல் தயார் செய்து உபயோகிக்கிறோம்.
இந்த Tool கள் சாதாரண மெஷினிங் Operation உபயோகப்படுத்துவதில்லை. பொதுவாக Grinding wheel செய்வதற்கு உபயோகப்படுத்துவார்கள்.Dressing செய்வதற்கு உபயோகப்படுத்துவார்கள்.
PCD: POLY CRYSTALLINE DIAMOND
இது Diamond tool -களில்அதிகம் உபயோகப்படுத்தும் வகையாகும்.
இது ஒரு Specially treated Diamond தான். Diamond Binding (பசை) material ஐ கொண்டு, Sintering -Process-ல் (அதாவது ஒரு Die- ல் போட்டு அதிக force – ல் அழுத்துவது) நமக்கு வேண்டியவாறு shape செய்து கொள்ளலாம்.
பின் ஒரு Holder -ல் Brazing -செய்து cutting tool ஆக உபயோகப்படுத்தலாம். Heavy cut எடுக்க இது பயன்படாது. Finishing operation – களில் அதிக life கொடுக்கும்.
பொதுவாக finishing Boring operations, Aluminium component களில் உபயோகிப்பார்கள்.
CBN: POLY CRYSTALLINE BORON NITRIDE
Tool அதிக் Temperature – லும் Hardness இழக்காமல் இருக்கும். இந்த மெடீரியல் Ceramic உடன் 40-65% என்ற அளவுடன் கலந்து உருவாக்கப்படுகிறது. அதிகமான கட்டிங் ஸ்பீட்க்கு உபயோகிக்கலாம்.