What are the engineering materials used for the machining process?
நாம் வேலை செய்யும் பொருள்கள் எல்லாம் ஏதோ ஒரு உலோகத்தால் செய்யப்படுபவை. உலகத்தில் உள்ள எல்லாம் ஒரு உலோகம்தான். உலோகங்கள் நமக்கு ஏற்ற வேலையை செய்ய கூடியவைகளைப் பார்த்து Select செய்கிறோம்.
What are the properties of engineering metals?
எல்லா உலோகங்களுக்கும் சில குணாதிசயங்கள் உண்டு. அவை,
Mechanical Properties
மெஷினிங், வளைப்பது, Load தாங்குவது போன்ற குணங்கள்.
Electrical Conductivity
Resistivity, Conductivity, Temperature, Co-efficient of Resistance. Die electric Strength, Thermo electricity ஆகியவை அடங்கும்.
Thermal
Heat Capacity, Specific Heat, thermal expansion, Thermal conductivity ஆகியவை அடங்கும்.
Chemical
அமிலங்கள் தாக்கத்தை ஏற்படுத்தும், ஏற்படுத்தாது.
Physical Properties
இவற்றில் Dimension, Appearance, Density, Specific Gravity, Melting Point, Porosity ஆகியவை செரும்.
Magnetic Properties
ஒரு உலோகத்தில் Magnetism உற்பத்தி செய்ய முடியுமானால் அந்த உலோகத்தில் Magnetic Property இருக்கிறது என்று பொருள்.
Mechanical Property
Elasticity – (நீளும் தன்மை) உறுதி (அதாவது
வெளியில் இருந்து ஒரு force வருமேயானால் அதை தாங்கும் சக்தி, Stiffness-(நீளும் தன்மையை எதிர்க்கும் சக்தி) Plasticity – (உருவை மாற்ற வல்லது), Ductility (நூல்போல் இழுக்க வல்லது). Malleability – (தகடு போல் தட்டும் போது கிழியாமல் இருப்பது) Resilience (Spring – போல் இழுத்து விட்டால் பழைய நிலைக்கு வருவது, Toughness – (ஒரு பொருள் உடைவதற்கு முன்னால் எவ்வளவு சக்தி தாங்குகிறது என்று பார்ப்பது). Hardness – (அதன் சக்தி), Hardenability (உலோகம் எவ்வளவு அளவு Heat Treat செய்ய முடியும் என்பதை கணிப்பது). Brittleness (உடையும் தன்மை என்று அறிவது) Machinability – (மெஷினிங் செய்வதற்கு ஏதுவாக உள்ளதா என்று பார்ப்பது). Weldability – (உலோகத்தில் Welding செய்ய முடியுமா என்று பார்ப்பது) Formability – (வேறு ஒரு Shape -ற்கு கொண்டு செல்ல முடியுமா என்று பார்ப்பது)
இவைகளெல்லாம் பல உலோகங்களுக்கு பலவாறாக பொருந்தும். நமக்கு எந்த Property தேவையோ அதற்கு தகுந்தாற்போல் Material select செய்துகொள்ளலாம்.
இவற்றைத் தவிர உலோகங்களில் உள் அமைப்பு (Density. Posity, Structure) எவ்வாறு உள்ளது போன்றவற்றை வைத்து நமக்கு வெண்டிய உலோகத்தை பயன்படுத்துகிறோம்.