MEASURING INSTRUMENTS AND MEASUREMENTS
எந்த ஒரு பொருளும் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு இருக்க வேண்டும். அந்த அளவுகள் என்ன என்பதை Drawing சொல்லும். Drawing – ல் பலவிதமான அளவுகள் கொடுக்கப்பட்டிருக்கும். பல விதமான Measuring Instruments உள்ளன.அதில் சிலவற்றை இங்கே பார்ப்போம்.
Linear Measuring Instruments:– நீள அளவை எடுக்கும் Instruments.
- Scale (Steel Rule)
- Steel Tape
- Outside Calipers
- Transfer Caliper
- Inside Caliper
- Hermaphrodite Caliper
SCALE
0.5 வரையில் உள்ள Tolerance – களுக்கு பயன்படுத்தப்படுகிறது.
STEEL TAPE
நீண்ட Job களுக்கோ அல்லது நீண்ட இடங்களுக்கோ உபயோகப்படுவது Steel Tape. இதில் இரண்டு பக்கங்களிலும் அளவுகோல் Marking செய்யப்பட்டிருக்கும்.
CALIPERS
இவைகளில் அளவு குறிப்பிடப்படுவதில்லை. இவைகள் இரண்டு Points இடையே உள்ள இடைவெளியை அளக்கிறது. Caliper -கள் நான்கு வகைப்படும்.
OUTSIDE CALIPER
இதன் கால்கள் உள்பக்கமாக வளைந்திருக்கும். OutsideDiameter – களை அளப்பதற்கு உபயோகப்படுகிறது. இதில் இரண்டு Leg – களை எதை அளக்க வேண்டுமோ அதற்கு தகுந்தாற்போல் நீட்டியோ, குறுக்கியோ adjust செய்ய வேண்டும். பின்பு இரண்டு Leg கிற்கும் உள்ள இடைவெளியை ஒரு ஸ்கேல் அல்லது Vernier கொண்டு அளவிட வேண்டும். இவைகளில் Fine adjustment செய்வதற்கான Adjustable Caliper – களும் வருகின்றன.
INSIDE CALIPER
இதன் காலகள் வெளிப்பக்கமாக வளைந்திருக்கும். InsideDimension – களை அளப்பதற்கு இது உபயோகப்படும். இதில் உள்ள இரண்டு கால்களை Bore போன்ற உள் அளவு எடுக்கவேண்டிய Job – ல் Bore -ல் இரண்டுபக்கம் தொடுமாறு adjust செய்து அதன்பின் ஒரு Micrometer அல்லது Vernier கொண்டு இரண்டு Leg – ன் பெண்ட் Portion னில் அளவு எடுக்கலாம். இவைகளில் Fine Adjustment செய்வதற்கான Adjustable Caliper-களும் உள்ளன.
HERMAPHRODITE CALIPER
இதில் உள்ள இரண்டு Leg – களில் ஒன்று உள்புறமாகவும் இன்னொன்று வெளிப்புறமாகவும் வளைந்திருக்கும். ஒரு Job -ன் Edge-ல் இருந்து Dimension எடுக்க வேண்டுமானால் இது உபயோகப்படும்.
TRANSFER CALIPER
Inside CaliperLeg மட்டும் Adjust செய்யும்படி இருக்கும். இது மாதிரியான Caliper கள் ஒரு Job ல் இருந்து மற்றொரு Job – ற்கு ஒரு போரின் Size – ஐ Transfer செய்ய உபயோகப்படும்.
VERNIER SCALE
இதையே Vernier Caliper என்றும் அழைக்கிறோம். இதில் Measurement செய்வது மேலே குறிப்பிட்ட Measuring instrument களை விட accuracy அதிகமாக இருக்கும்.
இதில் 2 ஸ்கேல்கள் உள்ளன. Main Scale, Secondary Scale (Vernier Scale) என்று பெயர். Main Scale – ல் 9 Division – களை எடுத்துக் கொண்டு அதை Secondary Scale – ல் 10 Division – களாக பிரிக்கப்பட்டிருக்கும்.The difference between a main scale division and Secondary scale equals to least count of vernier scale.
Vernier Caliper accuracy 0.01mm. Outside diameter, Inside Diameter, Depth ஆகியவைகளை அளவெடுக்கக்கூடிய Verniar கள் உள்ளது. தற்காலங்களில் இன்னும் துல்லியமாக அளக்கக்கூடிய Digital Vernior- கள் வந்துவிட்டன. அவைகள் மூலம் 0.001 Accuracy களை அளவிட முடியும்.
MICROMETER 
மிகக்குறைந்தமிகக் குறைந்த டாலரின் உள்ள இடங்களில் மைக்ரோ மீட்டர் பயன்படுத்தப்படுகிறது Micrometer களிலும் Outside Micrometer, Inside Micrometer, Depth Measuring Micrometer என்று பலவிதமான Micrometer கள் உள்ளன. Micrometer Bolt Nut Principle லில் வேலை செய்கிறது. மிகவும் துல்லியமாக தயாரிக்கப்பட்ட ஒரு Screw வும் (Stem) அதேபோல் தயாரிக்கப்பட்ட உள்புறம் உள்ள thread ம் (Thimble) சேர்ந்து Bolt Nut போல் வேலை செய்கிறது. இந்த Thimble -ன் வெளிப்புறத்தில் சுற்றிலும் Mark செய்யப்பட்டுள்ளது. அதேபோல் Stem வெளிப்புறத்திலும் Mark செய்யப்பட்டுள்ளது. பொதுவாக thimble ஒரு முழு சுற்று வந்தால் 0.25 என்று செய்திருக்கிறார்கள்.ஜாப் உட்காரும் இடத்திற்கு பெயர் Anvil இந்த ஆலை ஜாபிற்கு தகுந்தாற்போல் மாற்றிகொள்ளலாம்.இப்பொழுதெல்லாம் Dial பொருத்தப்பட்ட Micrometer கள் வந்துவிட்டன இவற்றின் Job in Size களை துல்லியமாக பார்க்க முடியும்.
HEIGHT GAUGE
உயரங்களை அளப்பதற்கான கருவி இதுவும் Vemier caliper Principle வேலைச் செய்கிறது. ஆனால் இப்பொழுதெல்லாம் Micron கணக்கில் வேலை செய்யும் Digital Height Gauge போன்ற சாதனங்கள் வந்துவிட்டன். இதைக்கொண்டு மிகத்துல்லியமாக Height களை அளக்கலாம். மிக சுலபமாகவும் அளக்க முடியும்.
DIAL INDICATOR
இவைகள் சிறிய அளவு Depth மெஷினில் செட்டிங் செய்யவும் பயன்படுத்தப்படுகிறது. இவற்றை தனியாக உபயோகப்படுத்த ஒரு height cage ல் Fitup செய்து பயன்படுத்தலாம் அல்லது இதற்கென்று ஹோல்டர்கள் உள்ளன அதனை கொன்டு Runout செக் செய்வதற்கும் பயன்படுத்தலாம். Indicator.
MILLIMESS
மிக துல்லியமாக மிகக்குறைந்த Depth -களையோ அல்லது Bore Size களையோ (ஒரு Setting Ring இருக்கவேண்டும்)அளக்கலாம். Micron கணக்கில் அளக்க வேண்டியதற்கு மட்டும் இதை உபயோகப்படுத்தலாம்
COMPUTERISED MEASURING MACHING (CMM)
இது முற்றிலும் Automatic machine. CNC Machine போல Program செய்து மெஷினில் Lond செய்து விட்டால் துரிதமாக Measurement செய்து முடிக்கலாம். Measurement எல்லாம் தானாகவே Print செய்து கொடுத்துவிடும். இந்த மெஷின் Electronic மூலம் வேலை செய்லிறது. நம்மிடம் உள்ள Most Accurate ஆக அளக்கக்கூடிய Equipment இதுதான்.
GAUGES
Measuring Instruments களை தவிர fixed Gauge களும் உள்ளன இவைகள் Size என்ன என்பதைக்காட்டாது. இவற்றில் GO & NOGO என்று இரு பகுதிகள்தான் இருக்கும். இவற்றைக்கொண்டு Job சரியா தவறா என்று தான் கண்டுபிடிக்கமுடியும். என்ன அளவு என்பதை கண்டுபிடிக்க முடியாது. இவற்றிலும் பல வகைகள் உண்டு.