What are work holding devices? What are commonly used work holding devices? How to use it?
- ஜாப்களை பிடித்துக்கொள்வதற்கான பயன்படுத்தப்படும் உபகரணங்கள்.ஒரு பொருளை உற்பத்தி செய்ய வேண்டுமானால் அந்த பொருளை இருக்கமாக பிடித்துக்கொண்டால்தான் டூல்கள் கொண்டு Machining செய்ய முடியும். Job பிடித்துக்கொள்ளக்கூடிய உபகரணங்கள் உள்ளன.
3 Jaw Chuck and 4 Jaw Chuck
- இவைகளில் மேலும் கீழும் போகக்கூடிய Jaw பொருத்தப்பட்டிருக்கும். இந்த Jaw க்களை Manual ஆகாவும், அல்லது Hyd Pressure மூலமாகவும் அல்லது Compressed air மூலமாகவும் மேலும் கீழும் கொண்டு போகலாம், இந்த ஜாக்களின் முன்புறத்தில் Serration கொடுக்கப்பட்டிருக்கும். இந்த Serration -கள்தான் Job -ஐ இருக்கி பிடிக்கின்றன. இந்த Jaw – கள் தேயும் தன்மை உடையவை. அது தேய்ந்தால் அது Job ஐ இருக்கி பிடிக்காது. ஆகவே இதை கவனித்துக் கொண்டே இருக்க வேண்டும். இந்த Jaw க்களை கொண்டு ஜாப்களை வெளியிலும் பிடிக்கலம், அல்லது Job உள்புறத்திலும் பிடிக்கலாம்.
- 3 jaw Chuck கள் self centered இதில் circle shape job களை மட்டுமே clamp செய்ய முடியும். 4 jaw chuck களை manual ஆக centre செய்ய வேண்டும். இதில் irregular job களையும் பிடித்துக் கொள்ள முடியும்.
இவை Turning centre களில் பயன்படுத்தப்படுகிறது.
COLLET
- இவைகள் உருண்டையான அல்லது மற்ற Square ஆகிய Job-களை பிடித்துக்கொள்ள உதவுகிறது. இவை self centered ஆகும்.
- கலெட்களில் Job ஐ பிடித்துக்கொண்டால் முழுமையான அளவு பிடித்துக்கொள்ளலாம். சிறிது Accuracy அதிக அளவு தேவை என்றால் இந்த collet-களை உபயோகப்படுத்தலாம்.இவை Turning centre களில் பயன்படுத்தப்படுகிறது.
VICE
- Job ன் உடைய shape irregular ஆக இருந்தால் இதை உபயோகப்படுத்தலாம்.Vice பொதுவாக Bench work ல் பயன்படுகிறது. மெஷின்களில் அதிகமாக உபயோகிப்பது இல்லை.
JIGS
- இவைகள் Job ஐ பிடித்துக்கொண்டு Tool – ஐயும் Guide செய்கிறது.
- Jig -கள் பெரும்பாலும் Drilling Machineகளில் செய்யும் Job -களுக்கு பயன்படுகிறது.
FIXTURE
- இவைகள் எந்தவிதமான Job களையும் Clamping செய்ய பயன்படுகிறது.Fixture -களில் Tool – கள் Guide செய்யப்படுவது இல்லை. Tool – கள் தனியே வந்து போகும். Fixture Job -ஐ மட்டும் பிடித்துக்கொள்ளும்.
- Clamping manuai ஆகவோ, அல்லது Hyd. Pressure கொண்டோ அல்லது காற்று அழுத்தம் கொண்டோ ஏற்பாடு செய்துக்கொள்ளலாம்.
- Fixture-களில் சில இடங்கள் work support கொடுக்கப்பட்டிருக்கும். அதாவது நாம் Job ன் மேலே clamp செய்யும்போது, Job thin cross section ஆக இருந்தால் பின்பக்கமாக வளையும். இதனால் நாம் Job வளைந்து இருக்கும்போது மெஷினிங் செய்வோம். Pressure Release ஆன உடன் Job- ன் அளவுகள் மாறிவிடும். இதைத்தடுக்க Clampling செய்யும் இடத்திற்கு எதிர்பக்கம் Work support கொடுக்கிறோம். இவை Job Bend ஆகாமல் பார்த்துக்கொள்ளும்.
- fixture கள் turning and Machining centre multi axis மெஷின்கள் உட்பட அனைத்து மசின்களிலும் ஜாபுக்கு ஏற்றவாறு பலவிதமான fixture களைப் பயன்படுத்தலாம்.
MAGNETIC CHUCK OR MAGNETIC SURFACE PLATE
- Job-களை clamping செய்ய சில நேரங்கள் Magnets பொருத்தப்பட்ட Chuck அல்லது surface Plate உபயோகப்படுத்தலாம் இவை அதிகமாக load தாங்காது.
MANDRELS
- இவைகள் Job -ன் போரில் Locate செய்ய உதவுகின்றன. Locate ஆன பின்பு clamping தனியாக செய்யவேண்டும்.
- ஒரு மாண்ட்ரல் என்பது ஒரு பணிப்பொருளைப் பிடித்து வடிவமைக்கப் பயன்படும் ஒரு கருவியாகும், பொதுவாக முன் துளையிடப்பட்ட துளைக்குள் செருகப்படுவதன் மூலமோ அல்லது ஒரு குறுகலான பகுதியைப் பிடிப்பதன் மூலமோ, பொருளை உருவாக்க அழுத்தம் கொடுக்கும்போது அதைச் சுழற்றி கையாள உங்களை அனுமதிக்கிறது ; எடுத்துக்காட்டாக, ஒரு நகைக்கடைக்காரர் ஒரு மோதிர மாண்ட்ரலைப் பயன்படுத்தி ஒரு மோதிரத்தை அளவிடலாம், அதை குறுகலான மாண்ட்ரலில் வைத்து மெதுவாக விரும்பிய அளவுக்கு சுத்தியலால் அடிக்கலாம்.
FACE PLATE
- ஃபேஸ்ப்ளேட் என்பது ஒரு லேத்தின் sipindle உடன் இணைக்கப்பட்ட ஒரு தட்டையான, வட்டமான தட்டு ஆகும், இது பல்வேறு எந்திர செயல்பாடுகளின் போது ஒரு பணிப்பொருளைப் பிடிக்கவும் சுழற்றவும் பயன்படுகிறது. இது ஒழுங்கற்ற வடிவ, பெரிதாக்கப்பட்ட அல்லது சமச்சீரற்ற பணியிடங்களை மையங்களுக்கு இடையில் அல்லது ஒரு சக்கில் வைத்திருக்க முடியாத ஒரு பாதுகாப்பான மற்றும் நிலையான தளத்தை வழங்குகிறது.
- முகப்பலகைகள் பொதுவாக மரவேலை, உலோக வேலைப்பாடு மற்றும் லேத்கள் வேலை செய்யும் பிற தொழில்களில் பயன்படுத்தப்படுகின்றன. வெவ்வேறு லேத் ஸ்பிண்டில்கள் மற்றும் ஒர்க்பீஸ் தேவைகளுக்கு இடமளிக்கும் வகையில் அவை பல்வேறு அளவுகள் மற்றும் பாணிகளில் வருகின்றன.